WELCOME 2015!
I like the below
உண்மையில் வருடாந்திரச் சூளுரைகளை ஏற்பவர்களின் பிரச்சினை அவர்கள் வருடம் முழுக்க ஊக்கத்துடன் இல்லை, திட்டமிட்டுச் செயலாற்றுவதில்லை, தன் எல்லைகளும் சாத்தியங்களும் அவர்களுக்கு தெரியவில்லை என்பதுதான். புத்தாண்டு அல்லது பிறந்தநாள் என்பது ஒரு புதிய தொடக்கம் என ஒருவர் நினைக்கிறார் என்றால் அவர்அதுவரை எதையுமே தொடங்கவில்லை என்பதுதான் அர்த்தம். தொடங்கிவிட்ட ஒருவனுக்கு வாழ்க்கை என்பது முறியாமல் நீளும் செயலூக்கம் அல்லவா?
தொடங்குவது வாழ்க்கையில் ஒருமுறையாகவே இருக்க முடியும். தொடங்கியபின் முன்னால் செல்வது மட்டுமே வாழ்க்கை. வாழ்க்கையை வருடாவருடம் தொடங்குவது என்பதைப்போல் அபத்தம் என ஏதுமில்லை. அது தொடங்காமல் தயங்கிக்கொண்டிருப்பது. நீச்சல்குளத்தின் எம்பு பலகையில் நின்று குதிக்கத் தயங்கி முன்னும்பின்னும் ஆடுவது. By Writer Jeyamohan