பூமியின் வரலாற்றுப் பக்கங்களில் மனித இனத்தின் காலக்கோடு பின்னங்களில் எழுதுமளவிற்கு மிகச்சிறியது. ஆனால் பூமியில் மனித இனம் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அளவில் பெரியது. நாம் நம்மைச் சுற்றி நமக்கு ஏற்றாற் போல் வாழ மற்ற உயிரினங்களையும் இயற்கை சூழலையும் நாம் பழக்கப்படுத்தியிருக்கிறோம். இதன் காரணமாக மனித இனத்தால் குறைந்தபட்சம் முன்னூறு உயிரினங்கள் அழிந்திருக்கக்கூடும். பூமியில் இருக்கும் மொத்த உயிரினங்களை கணக்கில் கொள்ளும் போது இது குறைவு தான்.அதே போல் பூமியில் மனித அறிவைக் கொண்டு அழியும் நிலையில் இருக்கும் பல உயிரினங்களை மீட்டெடுத்து அதனை வாழ வைத்துக்கொண்டிருக்கும் பெருமையும் நம்மைச் சாரும்.
மனித இனம் இங்கு பெறும் வெற்றி பெற்ற இனம். இதனால் தான் நாம் இங்கு நீண்ட காலம் உணவுச் சங்கிலியின் உச்சியில் அமர்ந்திருக்கிறோம்.இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் கண்டிப்பாக இருப்போம்.
பருவநிலை மாற்றத்தை தவிர்த்து பார்த்தோமானால் நமக்கென்று பெரும் ஆபத்து எதுவுமில்லை. ஆனால் பருவநிலை மாற்றம் நிச்சயம் பெரும் ஆபத்து தான். வரும் காலத்தில் நிச்சயம் இதன் தீவிரத்தை உணர்ந்து செயல்பட்டு பாதிப்பில் இருந்து காத்துக்கொண்டால் இன்னும் பல லட்சம் ஆண்டிற்கு கூட மனித இனத்தை எதனாலும் எதுவும் செய்ய முடியாது.
காரணம், பூமியைத் தாக்க வரும் ஒரு விண்கல்லை அதன் தாக்கத்திலிருந்து திசை திருப்ப அதன் திசையை கணக்கிட்டு ஒரு விண்கலத்தை அனுப்பி அதன் திசையை மாற்றி அமைத்தது மனித இனம் மட்டும் தான். வேறெந்த உயிரினத்தாலும் அது நிகழ்த்தப்பெற வில்லை.ஆனால் இந்த அறிவு மட்டும் மனித இனத்தை சக்தி வாய்ந்த இனமாக மாற்ற போதுமானதாக இருந்ததில்லை.
சமூகப் பிணைப்பு தான் மனித இனம் இங்கு தழைத்து நிற்க காரணம். இனமாகவும்,கூட்டமாகவும் நின்ற மனிதர்களினால் தான் இது சாத்தியமாகியது. ஒருவருக்கு ஒருவர் உதவி,கை கொடுத்து தூக்கி மேல் அழைத்து வந்தவர்களால் தான் தனது இனத்தை காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.
தகுந்தன தப்பி பிழைக்கும் என்பதன் அர்த்தம் நாம் புரிந்து வைத்திருப்பதை போல் சுயநலமாக ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும் வலிமை மிக்க உயிர் பிழைக்கும் என்பது இல்லை. இனமாகவும்,குழுவாகவும் இங்கு பிழைத்திருப்பதை குறிக்கும் வாக்கியம் அது.அதை தான் மனித இனம் செய்து வந்தது.
ஆனால் சமீபமாக இந்திய பொருளாதாரத்தின் நிலையை பற்றி படித்த போது மிகவும் சோர்வுடைய செய்தது.
இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர் அமெரிக்காவின் Ben Bernanke. இவர் அமெரிக்காவிம் மத்திய ரிசர்வை தலைமை தாங்கியவர். இவரது பொருளாதார கொள்கையான Quantitative Easing என்பதனை அவரது பதவிக்காலத்தில் அறிமுகம் செய்தார். எதற்காக என்றால்,அவர் அமெரிக்க மக்களின் பொருளாதார் நிலையை ஆராய்ச்சி செய்கிறார். சாமனிய மக்கள் அவர்கள் கட்டும் வரியை பார்க்கிறார்கள், பணவீக்கம் அதிகரிப்பதை உணர்கிறார்கள்,அதன் தாக்கத்தை கண்கூடாக பார்க்கிறார்கள், வர்க்க வேறுபாடு அதிகமாகிக் கொண்டே இருப்பதையும் பார்க்கிறார்கள். இதன் காரணமாக நாம் என்னதான் உழைத்தாலும் இங்கு நமது அடிப்படை தேவையை மட்டுமே பூர்த்திக்கொள்ள போதுமானதாக நமது வருமானம் இருக்கிறதே ஆனால் பெரு முதலாளிகளுக்கு மட்டும் எப்படி வரிச்சலுகையும்,கடன் தள்ளுபடியும் கிடைக்கிறதே என புரிந்து கொள்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் சோர்ந்து போகிறார்கள். கைவிடப்படுகிறார்கள்.அதனால் நாட்டின் உற்பத்தி பாதிக்கிறது. எனவே நாம் Quantitative Easing ஐ செயல் படுத்த வேண்டும் என ஒரு சில திட்டங்களை முன் வைக்கிறார்.
இது தான் அவருக்கு நோபலை பெற்று தருகிறது. இந்தச் சூழல் அமெரிக்காவில் மட்டுமில்லை உலகம் முழுதுமே இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் அதிகம் இருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாட்டில் இருக்கும் வர்க்க வேறுபாடு மிகவும் ஆபத்தானது. இதன் தாக்கத்தை பின்வரும் எடுத்துக்காட்டிலிருந்து நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
நான் தினமும் வேலைக்கு ஒரு பேருந்தில் பயணம் செய்கிறேன். போகும் வழியெங்கும் மெட்ரோ இருக்கிறது. மெட்ரோவில் ஒரு குடும்பம் சகவ சவுகரியங்களுடன் பயணிக்கும் அதே நேரத்தில் மெட்ரோ தடத்திற்காக போடப்பட்ட பாலத்தில் கீழ் துணியால் கட்டப்பட்ட வீட்டில் ஒரு குடும்பம் வாழ்கிறது. மெட்ரோ ரயிலில் பல குடும்பம் பயணிக்கிறது,மெட்ரோ தடமும் நீள்கிறது,அதன் அடியில் தங்கியிருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையும் நீள்கிறது.
இந்த wealth gap ஐ பார்த்துக்கொண்டே பேருந்தில் பயணிக்கும் நான் நான் கட்டும் வரியையும், கடனையும்,வட்டியையும்,விலைவாசியையும் அது தரும் சுமையையும் யோசித்துக்கொண்டே செல்கிறேன்.
இந்திய பொருளாதாரம் 20% எழைகளுக்கு சாதகமானதாக இல்லை. அதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு முதலில் அவர்கள் அழிந்தார்கள். கொஞ்ச காலம் சென்று 70% மிடில் கிளாஸ் எனும் கூட்டம் வரிச்சுமையால் அழிந்து கொண்டிருக்கிறது. மீதியிருக்கும் 10% பணக்காரர்கள் மட்டும் எல்லா வளமும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்காக தான் இந்த ஆட்சி நடக்கிறது.
Ben Bernanke நோபல் பரிசு பெற்றதை விமர்சிக்கும் இந்திய முதலாளிகளை என்னால் எடுத்துக்காட்ட முடியும். ஸ்ரீதர் வேம்பின் ட்வீட்டை எடுத்து பாருங்கள்.
உண்மையில் மேல சொன்னதில் அழிவதென்றால் செத்துப்போவது இல்லை. பொருளாதார ரீதியாக கைவிடப்படுவது. இரண்டும் ஒன்று தான் என்றாலும் உயிருடன் இருப்பதற்காவது வரி போடாமல் இருக்கிறார்களே என சந்தோசப்பட்டு கொள்வது மட்டும் தான் நம்மால் முடியும்.
நிச்சயம் இந்தியா இன்னும் வளரும் நாடுகளின் பொருளாதார நிலையில் முன்னிலை பெறும், நான்காமிடத்திலிருந்து முதலிடம் கூட பெறும், அதற்கு பின் நிச்சயம் இந்தியா வல்லரசு ஆகும் தான். ஆனால் யாரை அழைத்துக்கொண்டு போய் வல்லரசு ஆகும் என்பது தான் கேள்வி. வெறும் பத்து சதவீத பணக்காரர்களை மட்டுமா?
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home